௨
திருமால் பெருமை
********************
மாலை மணி ஐந்து; தி.நகர் வெங்கடநாராயணா சாலையில்,
TTDயை ஒட்டிய அந்த 150 மீட்டர் தூரம் யுத்த பூமி போல காட்சி அளிக்கிறது.
ஏதோ போலீஸ் தடியடி நடந்த இடம் போல செருப்புகள் சிதறிக்கிடக்கின்றன
தொன்னை தொன்னையாக பொங்கல் தயிர்சாதம் பிரசாதம் அள்ளி வீசப்பட்டு மிதிபடுகிறது.
பெரிய Q வரிசை வேகமாக நகர்கிறது.ஒரு விநாடி நின்றால் பின்னால் நிற்பவர் ஒரு முறைமுறைத்த வண்ணம் நம்மை தாண்டி செல்கிறார்.
நம்மிடம், உளுந்துர்பேட்டை அருகே புவனேஸ்வரி நகர் லேஅவுட் நோட்டீஸ்,(மனை இரண்டே லட்ச ரூபாய்) குங்குமம் மடிக்க அளிக்கப்படுகிறது.
உள்ளே சன்னதியை மறைத்துக்கொண்டு அர்ச்சகர்கள், சன்னதியை விட்டு தள்ளினாலும் நகராத பக்த கோடிகள், என ஒரே இரைச்சல்.
இத்தனையும் மீறி சர்வாலங்கார பூஷிதராக பல வண்ண பட்டாடை மலர் மாலைகள் அணிந்து அபயஅஸ்தம் காட்டி நம்மை ரட்சிக்கிறார் பெருமாள்..
"ஏடு கொண்டல வாடா வேங்கடேசா! கோவிந்தா! கோவிந்தா!!"
Comments
Post a Comment