Posts

Showing posts from August, 2020

" மஹா பெரியவா சரணம்"

 உ நானும் பைத்தியமாக ஆகலாமா என்று நினைத்துப் பார்க்கின்றேன்,நீ என்னப்பா சொல்கிறாய்? புத்தி ஸ்வாதீனமில்லாத ஒரு பையனைப் பார்த்து பெரியவா வன்முறையில் ஈடுபடாத புத்திஸ்வாதீனமில்லாதவர்கள் ஞானிகளாகலாம் கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா . புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன் . (முன்பு சற்று சுருக்கமான பதிவு.இப்போ விரிவானது) ஒரு சமயம்,ஸ்ரீ பெரியவாள் கலவையில் பல தினங்கள் தங்கியிருந்தார்கள்.அப்போது ஓர் ஏகாதசி நாளன்று அவர்கள், கலவையிலிருந்து சற்று தூரத்தில் உள்ள மடுவிருக்குமிடம் சென்று, மடுவில் ஸ்நானம் செய்து கொண்டிருந்தார். பெரியவர்களுக்குக் கைங்கர்யம் செய்பவர்கள் சிலரைத் தவிர, அங்கு வேறு எவருமில்லை. அப்போது அவ்விடத்திற்கு ஒரு மனிதர் தன் மனைவியுடன், ஒரு பையனைக் கையில் பிடித்து அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தார். அனுஷ்டானம் முடிந்தபின், அவர்கள் வந்தனம் செய்து எழுந்தனர்.ஸ்ரீஸ்வாமிகள் அவர்களை உட்காரச் சொன்னார்கள்.அவர்கள் உட்காரவில்லை. வந்த மனிதரும் அவர் மனைவியும், "எங்கள் மகன் இவன், புத்திஸ்வாதீனமில்லாதவனாக நடந்து கொள்கிறான்.பெரியவாள் கருணை புரியவேண்டும்...